திருநெல்வேலி : முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாளையம், நாச்சியார் காலனி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, என்பவரின் மகன் சக்திமுருகன்(35), என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் கவனத்திற்கு வந்ததால் குற்றவாளியை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ந டவடிக்கை எடுக்க, முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. தில்லை நாகராஜன், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு, காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் (28.04.2022), இன்று குற்றவாளியை, குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.