திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி அருகே ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; கட்டடத் தொழிலாளி. இவர், 2018ல், ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அனைத்து மகளிர்காவல் துறையினர் ,அவரை கைது செய்தனர். ஜாமினில் வந்தவர் பின் தலைமறைவானார். பிப்., 6ல் அவர் கைது செய்யப்பட்டார். இவ் வழக்கில், விக்னேஷுக்கு சாகும், வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி திருமதி. அன்புச்செல்வி, நேற்று உத்தர விட்டார். மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவர் விதித்தார்.