தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்யவேண்டியவைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய விழிப்புணர்வு செய்திகளை குறும்படம், புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையின் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை & கோ உரிமையாளர் ஹரிராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயபிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் திரு.சிவக்குமார், திரு.முருகப்பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சின்னதுரை & கோ கடை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.