தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு பெரியகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.K.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் தென்கரை காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்கள் ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும்,
கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தென்கரை பெண் காவலர்களின் இந்நிகழ்வு அப்பகுதிகளில் உள்ள திருநங்கைகளின் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.