தேனி: தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கவுதம் (29), இவர் போடி பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவ நாளன்று காலையில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை காணவில்லை. மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை காணவில்லை. இந்த நிலையில் ஒருவர் தனது மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்றதை பார்த்த கவுதம் அவரை பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில் அவர் பண்ணைபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் (19 ), என்பதும் மோட்டார் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இவரை போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.