தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (39), திருட்டு நகைகளை வாங்கி விற்பது உள்ளிட்ட குற்ற செயல்களில், ஈடுபட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. இவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது காவல் துறையினர், நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவரை காவல் துறையினர், அண்மையில் கைது செய்தனர். இந்த நிலையில் கர்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. கலைச்செல்வன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.