இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 39/2026 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணியில் ஈடுபட்டனர். கேணிக்கரை காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்தனர். இதன் அடிப்படையில் முத்துப்பாண்டி @ கில்லர், பயாஸ், துரைசிங்கம் மற்றும் மதன்குமரன் ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ் IPS அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
















