தேனி : மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சென்னை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கொண்ட குழு முல்லைப் பெரியாறு படுகை மற்றும் கரையோர பட்டா நிலங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆற்றுப் படுகையிலும் கரையோர மாநிலங்களிலும் மட்டும் 679 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டது. மோட்டார்கள் மற்றும் அதற்கான மின் இணைப்பு குறித்து லோயர் கேம்ப் முதல் 300 வரை சோதனைகள் நடத்தினர். 2
15 மோட்டார்கள் குறித்து சோதனை நடத்தியதில் விதியை மீறியும், இலவச மின்சாரத்தை பயன்படுத்தியும் வர்த்தக நோக்குடன் அமைக்கப்பட்டிருந்த 18 மின்சார மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.