சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே காலனிப்பகுதியைச் சேர்ந்த முத்து, த.பெ.மருது, ஜீவாநகர், மானாமதுரை என்பவரின் வீட்டில் (04.07.2024) அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து திருடிச் சென்று விட்டதாக முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலையத்தில் குற்ற எண்: 315/24, U/s.331(4), 305(a) BNS-ன் படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மானாமதுரை உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் மேற்பார்வையில், மானாமதுரை காவல் ஆய்வாளர் திரு.அலெக்ஸ்ராஜ் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு (19.07.2023) M.கரிசல்குளம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் (TN63 BM 8997) வந்த கலையரசன், த.பெ.ராமலிங்கம், கீழக்குளம் என்பவரை விசாரணை செய்ததில் மானாமதுரை இரயில்வே காலனி ஜீவாநகர் முத்து என்பரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே சோதனை செய்ததில் மறைந்து வைத்திருந்த 43 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டார். மேலும் கலையரசனுடன் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜீவாநகரைச் சேர்ந்த விஜய், அவரது தாய் செல்வி மற்றும் ஏனாதி கோட்டையைச் சேர்நத சந்தனமகாலிங்கம் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி