கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வ. உ. சி. நகரை சேர்ந்த ரமேஷ் வீட்டில் நகை, சாந்தபுரம் செந்தமிழ் நகரில் ஒரு வீட்டில் பணம் ஆகியவை திருடப்பட்டது. இந்த நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சையத் அபூபக்கர் (46). என்பவரை ஓசூர் தனிப்படை போலீசார் அக்.18 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது கர்நாடக மாநில காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்