அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகன் தளபதி,(34/24). என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, கீழப்பழூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்து, அதன் அடிப்படையில் (26.02.2024)-ந் தேதி மேற்படி குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.