திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், பரப்பாடியை சேர்ந்த கணேசன் (51). சீயோன் மலை கிராமம் அருகே சொந்தமாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார். (22.01.2025) அன்று அவர் பண்ணைக்கு வந்து பார்த்த போது 13 பன்றிகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கணேசன் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், உதய லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கந்தசாமி (32). சின்னராஜ் (30). பெரியதுரை (32). மணிகண்டன் (28). காளிமுத்து (30). ஆகிய ஐந்து பேரும் கணேசன் பண்ணையிலிருந்த பன்றிகளை திருடியது தெரிய வந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர், உதய லட்சுமி ஐந்து பேரையும் (04.02.2025) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்