திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோலியான்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி (32). என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த காப்பர் வயர் மற்றும் 3HP மின் மோட்டாரையும் காணவில்லை என மகாலட்சுமி ராதாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோலியான்குளத்தை சேர்ந்த மூர்த்தி (19). என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததால் உதவி ஆய்வாளர் மூர்த்தியை (02.10.2024) இன்று கைது செய்து அவரிடமிருந்து காப்பர் வயர் மற்றும் 3HP மின் மோட்டார் இரண்டையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்