திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ரயில் நிலையம், பண்ணை சங்கரய்யா் தெருவைச் சோ்ந்தவா் துளசிராமன். இவா் வெளியூருக்குச் சென்றிருந்தபோது மா்ம நபா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, தங்க நகைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுவிட்டாா். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்தனா். காவல்துறை விசாரணையில் அயன்சிங்கம்பட்டியைசோ்ந்த (16). வயது சிறுவன் இத்திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த பாலசுப்ரமணியம் அச்சிறுவனை கைது செய்து, திருடுபோன பொருட்கள் மீட்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்