திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணராஜன் மகன் செந்தில் (41), இவர் பாளையங்கோட்டை பகுதியில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாரணம்மாள்புரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் சண்முகராஜா (32), என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகராஜா, கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 மோட்டார்களை திருடி சென்றதாக பாளையங்கோட்டை காவல் துறையில், செந்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகமூர்த்தி, வழக்குப்பதிவு செய்து சண்முகராஜாவை கைது செய்தார்.