திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வகோமதி (21) என்பவரின் வீட்டில் இருந்து (08.02.2025) அன்று ஏ.டி.எம் கார்டு காணவில்லை என்றும், அதில் இருந்து பணம் ரூபாய் 15,000 எடுக்கப்பட்டுள்ளதாகவும் செல்வகோமதி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செல்வகோமதி பெரியப்பா மகனான இசக்கிராஜா (21). என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர், சொரிமுத்து பாண்டியன் இசக்கிராஜாவை (09.02.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 15,000 பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்