திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரம் எழில்நகர் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்டரையும் ஆனையா்குளம் சுதர்சன் ஐசக் என்பவரது வீட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில், பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஜான் மகன் ஜோசப் எபினேசர்(33). இலந்தைகுளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் முத்து (23). ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















