கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 2023 வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டால், காவல் நிலையத்தில் இருந்து உரிய விபரம் பெற, மாவட்ட சைபர் செல் பிரிவிற்கு தகவல் தெரிவித்து பின் IMEI Tracing போடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களுக்கு இது நாள் வரையிலும் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அரசால் புதியதாக உருவாக்கப்பட்ட வலைதளமான CEIR Portal செப்டம்பர் 2023 முதல் இயக்கத்தில் உள்ளது. அதன்படி சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு ரசீது பதிவு செய்த உடன் காணாமல் போன செல்போனின் IMEI விபரங்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே பதிவேற்றம் செய்யப்படுகிறது. பின் IMEI உடடியாக Block செய்யப்பட்டு Tracing-க்கு உட்படுத்தப்படுகிறது. எந்த நெட்வொர்க்கில் யார் உபயோகப்படுத்தினாலும் காவல் நிலையத்திற்கும், சம்பந்தப்பட்ட புகார் மனுதாருக்கும் SMS Alert உடனடியாக செய்யப்படுகிறது. பின்னர் காவல் நிலையத்தின் உதவியுடன் தொலைந்த செல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் காணமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் விரைவாக கண்டுபிடிக்கவும் மீட்கவும் CEIR Portal உதவியாக இருந்து வருகிறது. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித காலதாமதம் இன்றி காவல் துறையினர் துரிதமாக செயல்பட துணையாக உள்ளது. அதன் பிரகாரம் CEIR Portal மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆகஸ்ட்-2024 முதல் செப்டம்பர்-2024 மாதம் வரை 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு (மதிப்பு சுமார் ரூ.10,06,000/-) இன்று (23.10.2024)-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்கள் உடனிருந்தார். மேலும் இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 47 செல்போன்களும் (மதிப்பு சுமார் ரூ. 8,19,000) சம்மந்தப்பட்ட உட்கோட்ட அதிகாரிகள் மூலமாக உரியார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்