திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் கலந்து கொண்டு, ஜனநாயக முறையில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதும், தேர்தல் நடைமுறைகளை நேர்மையாகவும் நியாயமாகவும் பின்பற்றுவதும் குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
தேர்தல் காலத்தில் காவல் துறையின் பொறுப்பு மற்றும் நடுநிலையான பணிகள் மிக முக்கியமானவை என்பதை வலியுறுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைவரும் சட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
















