அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் காவல்துறை சிறப்பு பிரிவான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் (10.12.2024) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன் I.P.S., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.செல்வராஜ் அவர்கள் உடனிருந்தார்கள்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வின்போது இந்த சிறப்பு பிரிவில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை சரி பார்த்தார்கள். இதனைத் தொடர்ந்து சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கென்னடி அவர்களிடம் பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். மேலும் இந்த ஆய்வின்போது சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவி , புள்ளியல் ஆய்வாளர் திருமதி.பாப்பாத்தி, காவலர் திரு.கார்த்திக் ஆகியோர் இருந்தார்கள்.