திருச்சி: இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி தலைமை செய்தியாளர் சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிக சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பண்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட செய்தியாளராக திகழ்ந்தவர். காவிரி பிரச்சனை மற்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாகுவதற்கு தன் பத்திரிகை பணியை முழுமையாக அர்ப்பணித்தவர். அன்பு, அமைதி, சிரித்த முகம், நற்பண்பு, நேர்மை கொண்ட சிறந்த மனிதர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். என்ற செய்திகேட்டு, இந்த இழப்பை எல்லோர் மனமும் ஏற்க மறுக்கிறது. அவரை இழந்து வாடும் மனைவி,பிள்ளைகள் குடும்பத்தார்கள், நண்பர்கள் செய்தியாளர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், மறைந்த தோழருக்கு ஆழ்ந்த இரங்கலையும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி