திருச்சி – தஞ்சாவூர் மெயின் ரோடு வரகனேரி அருகே உள்ள ஒயின்ஷாப் பாரின் சிறிய சந்து மூலம் மது விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் கூடுதல் விலைக்கு மது விற்பது தெரியவந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கூடுதல் விலைக்கு விற்ற மண்ணச்சநல்லூர் கள்ளர் தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவரை கைது செய்தனர். இதேபோல் திருச்சி-திருவெறும்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து மகன் செங்கதிர், திருவெரும்பூர் காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகிய இருவரும் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது