திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியிட மாற்றம். சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் வன விரிவாக்க மையத்திற்கும் அங்கிருந்த வனச்சரக அலுவலர் சுரேஷ் சிறுமலை வனசரகத்திற்கும் பணியிடம் மாற்றி உத்தரவு. பணியிட மாற்றம் நடந்து ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் இந்த அதிரடி பணியிட மாற்றம் நேற்று உத்தரவிடப்பட்டு இன்று புதிய இடத்தில் பதவியேற்றுள்ளனர் என்று தகவல் . மாவட்ட வனத்துறை அதிகாரியின் இந்த திடீர் உத்தரவு ஏன் (ஒராண்டு கூட முடிவடையாத நிலையில் ) என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















