திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், நீர்த்தேக்கத்தில் விழுந்த வாலிபரை 3-ம் நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
திண்டுக்கல்: சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(25) .இவர், கொடைக்கானலில் உள்ள கூக்கால் நீர்தேக்கத்தில் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது, தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில், கொடைக்கானல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீர்தேக்கத்தில் பெரும்பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும்,படகு மூலம் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இன்று 3-ம் நாளாக தனுஷ் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடன் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களும் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் சகதி நிறைந்த தண்ணீரிலும் நீச்சல் அடித்து செல்லும் தன்மை கொண்டவர்கள்.
பழனியில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் சுற்றித்திரிந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் , பழனி பொன்காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக முத்து(26), தனுஷ்குமார் (19), அர்ஜூன்குமார் (19), கண்ணன்குமார் (28), ராம்குமார் (20), சரவணன் (23), பிரேம்நாத் (22) சரவணன் (21) ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் 8 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்
பழனியில் பெண்ணிடம் 4 பவுன் தங்க நகை பறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் , பழநி அருகே கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் மனைவி செல்வி(45). வீட்டில் தனியாக இருந்த போது ,வீட்டில் உள்ள தண்ணீர் தரம் சோதிக்க வருவதாக கூறி இருவர் வந்தனர். கதவை திறந்த போது செல்வி அணிந்திருந்த நான்கு பவுன் செயினை பறித்து சென்றனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா