திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஏப் 27ம் தேதி நடைபெறவுள்ளது. என கலெக்டர் விசாகன், தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஏப். 27ம் தேதி காலை 10. 30 மணியளவில் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
எனவே, அனைத்து விவசாயிகளும், கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைப்பிடித்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.