திண்டுக்கல் அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சவர்மா குறிப்பிட்ட நேரம் சூடாகி வேக வைக்கப்பட வேண்டும். சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும் முன்பாக அவசர, அவசரமாக சவர்மா பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. சரியாக வேகாத இறைச்சி மனிதர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே சவர்மா குறித்து பிரச்சினைகள் எழுவதால், திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி