திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைமை கண்காணிப்பாளர் (DIG) திரு. P. சாமிநாதன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர் திருமதி. நேகா ஆகியோர் பூங்கொத்து வழங்கி மரியாதையுடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையின் செயல்பாடுகள், சட்டம்–ஒழுங்கு நிலை மற்றும் எதிர்கால பணிகள் குறித்து அதிகாரிகளுடன் DIG சாமிநாதன் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் சரகத்தில் சட்டம்–ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















