கீரனூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எல்லையில் பழனி தாலுகா அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொங்கூர் பிரிவில் சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. விபத்துகளில் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது மேலும் அருகிலேயே அரசு மதுபான கடை இருப்பதால் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் உயிரிழப்பு. காவல்துறையினர் விபத்து பகுதியில் எச்சரிக்கை பலகையும் வேகத்தடை அமைக்க வேண்டும் மேலும் பேரிக்காடும் அமைத்து விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும் என கீரனூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது!
கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியான கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை பணியை தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவா (24),ஜெயக்குமார் (39) ஆகிய 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அஜித் குமார் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை அருகே தொழிலாளி மீது போக்சோ
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நிலக்கோட்டையை அடுத்த நோட்டக்காரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த வீரகாளி(20) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வீரகாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நத்தம் அருகே ஒருவர் பலி!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஊராளிப்பட்டி சேர்ந்த ராமன் (68), முன்னாள் திமுக பிரதிநிதி. தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அப்பாஸ்புரம் வளைவு அருகே பழுதாகி நின்று இருந்த டிராக்டர் மீது மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்த அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயில் மோதி வாலிபர் பலி!
பழனி அருகே உள்ளது சிவகிரிபட்டி, இங்கு ரயில் தண்டவாளப்பகுதியில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக, பழனி ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்பொழுது ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். பின்பு போலீஸ் விசாரணை நடத்தியதில் சிவகிரிபட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் அரவிந்த் வயது (20) என்றும், இவர் கோவையிலிருந்து மதுரையை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டவாளத்தை கடக்கும் பொழுது மோதி இறந்தது தெரிய வந்தது. இது பற்றி பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.