காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது 50 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் : திண்டுக்கல் கன்னிவாடி வனசரகம் ஆத்தூர் பகுதியில் கன்னிவாடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய குண்டுமணி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களுக்கு தலா 25,000 வீதம் ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சீலப்பாடியைச் சேர்ந்த கனகபாண்டி (29), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கனகபாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வனவிலங்கை வேட்டையாடியவர்கள் மீது கடும் நடவடிக்கை
கன்னிவாடி வனச்சரகம், செம்பட்டி பிரிவு, சித்தையன்கோட்டை பீட், ஆத்தூர் கிராமப் பகுதியில் ரோந்து பணியின் போது காட்டு பன்றியை வேட்டையாடியது சம்பந்தமாக WLOR – 10/2023 வன உயிரினக்குற்றம் கண்டறியப்பட்டு குற்றவாளியாகிய சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த A1- குண்டுமணி மற்றும் A2- முருகன் ஆகிய இருவரிடமும் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி தலா 25,000/- வீதம் மொத்தம் ரூ.50,000 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
காதலியை தேடி வந்த மதுரை வாலிபருக்கு தர்ம அடி
வேடசந்தூர் அருகே உள்ள ஊரை சேர்ந்த சேர்ந்த (18), வயது மாணவிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருவரும் பேசி வந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர். அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் பேசியும் கேட்காத ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் ஊருக்கு வந்து அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கருங்குளம் கண்மாய் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கார்த்திகைராஜா (39), சவுந்தரபாண்டியன் (29), ஆறுமுகம் (53), உள்பட 5 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.32 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதை காளான் விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் போதை காளான் விற்பனை செய்த ரமேஷ்(44), உஷா(39), சைஜி(25), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் போதை காளானை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 5 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன் அவர்களின் கையெழுத்தை திருடி உத்தரவு கடிதம் போல் தயார் செய்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஏமாற்றி பள்ளி மாணவ மாணவிகளிடம் மேஜிக் புக், காகித கலைப் பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 5 பேரை நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
பாறைகுளம் கரையில் தலை சிதைந்த நிலையில் ஆண் பிணம்
நந்தவனப்பட்டி பாறைக்குளம் கரையில் தலை சிதைந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இவர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மதிவாணன்(63), என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் மதிவாணன் எதற்கு குளத்திற்கு வந்தார்? அல்லது கொலை செய்து யாரேனும் வீசி சென்றனரா? அல்லது தற்கொலையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
சின்னாளப்பட்டியை அடுத்த முருகன்பட்டி அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முயன்ற ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), என்பவரை அம்பாத்துரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகமது இப்ராகிம் செட்டியபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற சரண்யா(31) என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்த 2 பவுன் தங்கச் செயின் பறித்த சம்பவம் மற்றும் போக்குவரத்து நகரை சேர்ந்த மஞ்சுளா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 3 பவுன் செயினை பறித்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது முகமது இப்ராஹிம் என்பது தெரிய வந்ததை அடுத்து அம்பாத்துரை போலீசார் முகமதுஇப்ராஹிமைகைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு
கொசவபட்டி பகுதியை சேர்ந்த (23), வயது பெண்ணை மதுரை மாவட்டம் ஊரணிப்பட்டி பகுதியை சேர்ந்த வாசிராஜா(23),என்ற வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து வாசிராஜாவை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா