கல்துறை பகுதியில் ஏழு பேரை பிடித்து விசாரணை!
திண்டுக்கல் : பழனி அருகே கீரனூர் கல்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பிடித்து விசாரணை அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் பணம் பறிமுதல் மேலும் நான்கு காரும் பறிமுதல் செய்யப்பட்டது . திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அவர்கள், தகவலின் படி S.I இசைக்கி ராஜா, தலைமையிலான போலீசார் நடவடிக்கை
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி!
திண்டுக்கல் எரியோடு அருகே உள்ள பாறைகுளத்தில் எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்த அமீர் (27), அவரது மனைவி மகாலட்சுமி (24), துணி துவைக்க சென்றனர். அப்போது விளையாட்டாக மனைவியிடம் தண்ணீரில் குதிக்க போகிறேன் என்று பாசாங்கு செய்த அமீர் தண்ணீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அமீரின் உடலை மீட்டனர். இதுகுறித்து எறியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
ஒத்தக்கடை அருகே ஒருவர் பலி!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியை அடுத்த ஒத்தக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது டூரிஸ்ட் வேன் மோதியது. இதில் சிறுமலையைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிராஜுதீன், ஏட்டு தோமனிக் ஆகியோர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் உடல் இரண்டு துண்டாகி பலி!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடுகம்பட்டியைச் (முத்துசாமி) என்பவரது மகன் பழனிச்சாமி (60), இவரது மனைவி முத்துலட்சுமி என்பவர் உடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு ஆண் 11 வகுப்பு படித்து வருகிறார் இவர் கடந்த ஐந்து வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறியவர் காலை 8 மணிக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் இரண்டு துண்டாகி பலியானார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.