திண்டுக்கல் அருகே வாலிபர் பலி!
திண்டுக்கல் : திண்டுக்கல், வத்தலக்குண்டு ரோடு மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .வாலிபரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவர் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தாலுகா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு
அம்பாத்துரை அருகே ரயிலில் அடிபட்டு வெள்ளோடு ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சூசைராஜ் (57),என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவி ரயிலில் விழுந்து தற்கொலை!
தாமரைப்பாடி அருகே நாகல் நகரைச் சேர்ந்த யாசினி (20) என்ற சட்டக் கல்லூரி மாணவி ரயிலில் விழுந்து தற்கொலை. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,எஸ்பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.