திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அருகே வத்திப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்பி.சீனிவாசன், கிடைத்த ரகசிய தகவலின் படி நத்தம் ஆய்வாளர் ராஜமுரளி, சார்பு ஆய்வாளர் சரவணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக், மற்றும் காவலர்கள் நடத்திய தீவிர சோதனையில் வத்திப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த மலர்(42), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி அருகே உள்ள குளத்து பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்பி. சீனிவாசன், கிடைத்த ரகசிய தகவலின் படி வடமதுரை சார்பு ஆய்வாளர் பிரபாகரன், வேடசந்தூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார், தனிப் பிரிவு காவலர் சசி, ஆகியோர் நடத்திய தீவிர சோதனையில் கஞ்சா விற்பனை செய்த வடமதுரை பகுதியை சேர்ந்த முருகேசன், முகமது இக்பால், ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.