திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை மேற்கொண்டனர். அதில் 3,700 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து இரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















