திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, அகரம் பிரிவு பகுதியில் திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து முத்தூர் நோக்கி சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரியை திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் (38). ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றதாக கூறப்படும் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சுண்ணாம்புக்கல் சாலையில் கொட்டி சிதறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















