திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் E- Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் E-Filing முறையை நடைமுறைபடுத்தியதை நிறுத்திவைக்ககோரி யும், வழக்கறிஞர் பாதுகாப்புசட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நகல் போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















