திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொடைக்கானல் வன உயிரின சரணாலய சூழல் உணர்வு மண்டல கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்கள் மேற்கொண்டு வரும் வனத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் திரு. அரவிந்த் (கொடைக்கானல் வட்டம்), மாவட்ட வன அலுவலர் திரு. நாக சதீஷ் கிடிஜாலா (திண்டுக்கல் வன கோட்டம்) உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















