திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது இவரின் செல்போனை திண்டுக்கல் சீலப்பாடி சேர்ந்த தனபால் மகன் ராஜா(32). கம்பளியம்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் செந்தில்குமார்(43). ஆகிய இருவரும் திருடினர். இது குறித்து சங்கர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா, செந்தில்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















