திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கிய ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















