திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் காவல் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, தேர்தல் காலத்தில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பேணுதல் மற்றும் வாக்குச்சாவடிகளில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















