திண்டுக்கல் பெரியார் சிலை அருகில் உள்ள டீக்கடையில் பாலசுப்பிரமணி(50) என்பவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது குறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் பாலசுப்ரமணி புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் நகர் குற்றத் தடுப்பு பிரிவு காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் டிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தங்கபாண்டியன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா