திண்டுக்கல் : திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (41). என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று நத்தம் சாலை R.M.T.C. காலனி அருகே சேசுராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதே நேரத்தில், யாகப்பன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் வாசலில் சேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகா (35). என்பவரையும் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் அவர்கள் நேரடியாக நடவடிக்கை எடுத்து, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலையின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















