திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து, நாக்பூருக்கு ஆராய்ச்சிக்காக ‘மைஸ்’ எலிகள் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ படிப்பு ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக ‘மைஸ்’ இன எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை எலிகள் திண்டுக்கல் அருகே உள்ள என். பஞ்சம்பட்டியில் வளர்க்கப்படுகின்றன. இதற்கிடையே, மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு 25 ‘மைஸ்’ எலிகள் அனுப்பும்படி ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் வழியாக சென்ற மும்பை ரெயிலில் 25 ‘மைஸ்’ எலிகள் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த எலிகள் பிறந்து 3 மாதங்களே ஆனவை ஆகும். எனவே ,பிளாஸ்டிக் தட்டில் மரத்தூள்களை பரப்பி, எலிகளை தட்டுக்குள் வைத்து வலையால் மூடியிருந்தனர். மேலும், மும்பை ரெயிலில் சரக்கு பெட்டியில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் எலிகள் கொண்டு செல்லப்பட்டன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி