திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 58 காவலர்கள் (ஆண் – 54, பெண் – 4) 45 நாட்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து (02.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப. அவர்கள் பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பணிகளை எவ்வாறு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கி, பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
















