திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு செல்லமந்தாடி சோதனைச்சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கூவனூத்து கவராயப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,43,470 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் சுல்தான்சிக்கந்தர் மற்றும் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















