திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு, சிட்கோ அருகே நள்ளிரவில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து மாலப்பட்டி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த அருண்ராமசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1,96,420 பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுல்தான் சிக்கந்தர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும், உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவர்களிடம் காண்பித்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















