திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31). என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த (டி.எஸ்.பி) கார்த்திக், குற்றவாளி விக்னேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதில் விக்னேஷ் காயமடைந்தார். தாக்குதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விக்னேஷும் ஆகிய இருவரும் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் நகரப் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















