திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி, வேடசந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஏ. சிவக்குமார் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. கே. ஜெயசங்கர் ஆகியோருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (27.02.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்கள், ஓய்வு பெறும் அதிகாரிகளை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இவர்களின் சேவையை அதிகாரிகள் பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















