திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் 18.03.2023-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த குடியரசு தலைவர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு முடித்து, பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக்கு சென்று கொண்டிருந்தபோது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய பதிவேடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். பல்வேறு திருட்டு மற்றும் குற்றவழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டினார்.