தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 16 காவலர்களை (17.10.2025) தாலுகா காவலர்களாக பணி நியமனம் செய்து, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்கள் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.