திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகுநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சக்திவேல் (36). மற்றும் அதே பகுதியை சேர்ந்த புதுராஜா என்பவருக்கும் உள்ள முன்விரோதம் காரணமாக புதுராஜா மற்றும் அவரது மகன் பாலமுருகன் மற்றும் கார்னேஷ் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கைகளால் தாக்கியதாக (17.09.2024)-ஆம் தேதி, கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்